பூடான் நாட்டைப் பற்றி விக்கிபீடியாவில் படித்துக் கொண்டிருந்தேன்.நமக்கு அருகில் அதிர்ச்சியான வாழ்க்கை முறைகளை கொண்டிருக்கும் ஒரு நாடு. பாருங்கள் இதனை......
- (படத்தில் ஒரு பூடான் காதல் ஜோடி)
- உலகிலே கடைசியாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்திய நாடு.ஆண்டு - 1999. (எதுக்கு தெரியுமா?கலாச்சார பதுகாப்புக்காக..உன்மைதானுங்கோ?))
- இன்று வரை ரயில் போக்குவரத்து இல்லாத நாடு.
- உலகிலே மகிழ்ச்சியை அடிப்படையாக வைத்து பொருளாதரத்தை அளவிடும் ஒரே நாடு.(Gross National Happiness) (எப்படிங்கண்ணா?...பொருளாதரப் படி பார்த்தால்,அதிக லாபத்துடன்,அதிக எண்ணிகையில் ஒரு பொருள் விற்றால் அது மக்களின் மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது என்று அர்த்தமாம்..இது போக கலாச்சார மேம்பாடு, மக்களின் வாழ்க்கை தரமும் இதர காரணிகள்)
- மகிழ்ச்சியாக வாழும் நாடுகளில் உலகின் 8வது இடம், ஆசியாவில் முதல் இடம்.(நமக்கு எத்தனை தெரியுமா? 125 வது)
3 comments:
மேலும் இதைப் போல் இடுக!
-Ragu
நல்லா இருக்கு.
நன்றி குமார்!
Post a Comment