Monday, August 05, 2013

காதல் கல்யாணத்துக்கு செல்லமும் காரணமே...

தனது மகள் காதல் தொடர்பாக சேரன் பேட்டி அப்பா என்ற நிலையில் சரியாக இருக்கலாம். ஆனால் அவரது மகள் பேச்சை பார்க்கும் போது ஒரு தெளிவான நிலையில் இல்லை என்றே நினைக்கிறேன். சந்துரு என்னிடம் சரியாக பேச வில்லை. அதனால் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன் என்பது எவ்வளவு பொருத்தமில்லாத பேச்சு.

எம்மை சுற்றியும் சில நெருங்கிய உறவுகளில் இந்த முதிர்ச்சியில்லாத காதல் கல்யாணங்கள் நடந்துவந்துள்ளதை பார்த்துள்ளேன்.  இதிலுள்ள ஒரு பொதுப்படையான தன்மை பெற்றோர்களின் செல்லமும் முக்கிய காரணமே.

தமது குழந்தைகள் தாங்கள் பட்ட கஷ்டத்தை படக் கூடாது என்றே நினைக்கிறார்கள். ஆனால் அதே வேளை குழப்பம் மிகுந்த இந்த உலகில் தெளிவாக எப்படி வாழ வேண்டும் என்பதை கற்று கொடுக்க தவறி விடுகிறார்கள். 

சேரனின் பெண்ணை பார்க்கும்போது இருபது வயதில் இருக்க வேண்டிய முதிர்ச்சி இல்லை. ஆனால் அதற்கு மேல் உள்ள தெரியம் உள்ளது. இது அசட்டு தனமான தைரியமே அன்றி வாழ்க்கையில் பயன்படுமளவு இல்லை.

சேரனின் பேட்டியில் தந்தை என்ற நிலையில் மகளைப் பற்றி கவலைப்படுகிறார். ஆனால் தந்தை வளர்ப்பு என்ற நிலையில் அவர் சறுக்கி உள்ளதாகவே நினைக்கிறேன்.

மீனை பிடிச்சு கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்று கொடுத்தால் தான் நன்றாக இருக்கும். டார்வினின் கூற்றுப்படி தகுதியுள்ளவையே தப்பிக்கும். 



Friday, May 18, 2007

பூடான் - ஒரு புரியாத புதிர்



பூடான் நாட்டைப் பற்றி விக்கிபீடியாவில் படித்துக் கொண்டிருந்தேன்.நமக்கு அருகில் அதிர்ச்சியான வாழ்க்கை முறைகளை கொண்டிருக்கும் ஒரு நாடு. பாருங்கள் இதனை......

    (படத்தில் ஒரு பூடான் காதல் ஜோடி)

  • உலகிலே கடைசியாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்திய நாடு.ஆண்டு - 1999. (எதுக்கு தெரியுமா?கலாச்சார பதுகாப்புக்காக..உன்மைதானுங்கோ?))
  • இன்று வரை ரயில் போக்குவரத்து இல்லாத நாடு.
  • உலகிலே மகிழ்ச்சியை அடிப்படையாக வைத்து பொருளாதரத்தை அளவிடும் ஒரே நாடு.(Gross National Happiness) (எப்படிங்கண்ணா?...பொருளாதரப் படி பார்த்தால்,அதிக லாபத்துடன்,அதிக எண்ணிகையில் ஒரு பொருள் விற்றால் அது மக்களின் மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது என்று அர்த்தமாம்..இது போக கலாச்சார மேம்பாடு, மக்களின் வாழ்க்கை தரமும் இதர காரணிகள்)
  • மகிழ்ச்சியாக வாழும் நாடுகளில் உலகின் 8வது இடம், ஆசியாவில் முதல் இடம்.(நமக்கு எத்தனை தெரியுமா? 125 வது)
ஆசை அதிகமில்லா விட்டால் மிகிழ்ச்சியும் அதிகமாகத் தான் இருக்கும் போல..